அமுதா… (03)

அமுதா... குறுங்கதைத் தொடர் பகுதி - 03 "அமுதா..." கொஞ்சம் சத்தமாகக் கூப்பிட்டேன். முன்னால் நடந்து சென்றுகொண்டிருந்தவள் நின்று திரும்பிப் பார்த்தாள். "ஹாய் பாரதி" என்றபடி என்னை நோக்கி வர நானும் சில அடிகள் முன்னோக்கி நகர்ந்தேன். கை நீட்டினேன். கைகுலுக்கினாள். "என்ன இந்த பக்கம்?" அமுதா கேட்டாள். "பொங்கல் லீவுக்கு வந்தேன். நாளைக்கு பயணம். அதுதான் கொஞ்சம் டவுனுக்குப் போய் வரலாம்னு வந்தேன். நீங்க?" "எனக்கு இப்போ தான் வேலை முடிஞ்சிச்சு. வீட்டுக்குப் போய்க்கிட்டிருக்கேன்" அவள் … Continue reading அமுதா… (03)

நானும் வாசிப்பும்

தமிழ் என்றால் எனக்கு உயிர். வாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நான் சில காலம் வாசிப்பை விட்டு விலகியே இருந்தேன். என்னை அறியாமல் தான் அந்த விலகல் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. அந்த விலகல் நிலையில் இருந்து என்னை மீட்டெடுக்கும் முயற்சியின் முதற்படியில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்று சொல்லலாம். இந்த முறை ஊருக்குப் போகும் போது எனது குழந்தைக்காக சில பொருட்களை வாங்கிக் கொண்டேன். நான் செல்லத் தீர்மானித்திருந்த பேரூந்துக்கு இன்னும் நேரமிருந்தது. இந்நிலையில் எனக்காக … Continue reading நானும் வாசிப்பும்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 இங்கிலாந்து வசம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019ஐ இங்கிலாந்து அணி கைப்பற்றியிருக்கிறது. எமது வலைத்தளம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அமுதா… (02)

குறுங் கதைத் தொடர் பகுதி - 02 பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் பார்த்த போது பூத்த காதலை இப்போது வரை மறக்காமல் சுமந்து திரிகிறேன். இரண்டு தசாப்தங்களைக் கடந்தும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் காதல். பாடசாலைக் காலத்தில் பல தடவை என் காதலை அவளிடம் சொல்ல முயற்சித்தும் என்னால் சொல்ல முடியவில்லை. அதன் பிறகும் கூட நான் காதலை வெளிப்படுத்தவில்லை. என்னால் காதலைச் சொல்ல முடியவில்லை என்பதை விட சொல்ல தைரியம் இல்லை என்பதே உண்மை. சில … Continue reading அமுதா… (02)

அரசாங்கத்தின் கவனத்திற்கு – 04| கன்னியாவுக்குச் சத்திய சோதனை

ஓர் இனத்தின் அடையாளங்களை அழிப்பதே அவ்வினத்தைச் சுத்திகரிப்பதன் அடித்தளமாகும். வரலாற்று உண்மைகள், தடயங்களை அழித்தலைப் பலம்பொருந்திய ஆயுதமாகக் கையிலெடுத்துள்ள பேரினவாதம், மிகச் சாமர்த்தியமாகவும் கனகச்சிதமாகவும் அப்பணியைச் செவ்வனே முன்னெடுத்து வருகிறது. சில இடங்களில் அடாத்தாகவும் இன்னும் சில இடங்களில் மிகமிகச் சூட்சுமமாகவும் சுத்திகரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ்மொழி பேசுவோர் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் அடாத்தாக முன்னெடுக்கப்படும் இனச்சுத்திகரிப்பு மலையகத்தில் பெரும்பான்மையினக் குடியேற்றச் செருகலுடன் ஆரம்பித்து, சனத்தொகையைக் கருவறுக்கும் திட்டமிட்ட கருத்தடை வரை வளர்ந்து நிற்கிறது. யுத்தத்துடன் காணிகளைக் … Continue reading அரசாங்கத்தின் கவனத்திற்கு – 04| கன்னியாவுக்குச் சத்திய சோதனை

உங்கள் வாக்கு யாருக்கு?

ஒன்னு இராசாவின் மகன் இராசாவாகும் பழைய சித்தாந்தத்தை கையிலெடுக்கிறோம்... இல்லையெனில் இராசாவுக்கு கூசா தூக்கிட்டு இருந்தவர்களை இராசாவாக்குறோம்... இல்லையெனில் நடிகர்களை நடிகர்களாக பார்க்க தவறி தலைவா என்று உசுப்பேற்றி அவரை இராசாவுக்குறோம்.... உங்கள் தொகுதியில....நான் பிறந்த இது... இந்த மக்களுக்கு எல்லாம் விதத்திலும் பயன்படுகிற விதத்தில் ஏதாச்சும் இந்த தொகுதிக்கு செய்ய முடியாதான்னு படிச்ச படிப்பையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு சுயேட்சையா நிற்கும் ஒரு உண்மை வேட்பாளர் இருப்பார்... அவரை கண்டுபிடிச்சு அவரையும் ஒருமுறை கரிசனத்தோடு பாருங்க... ஒரு … Continue reading உங்கள் வாக்கு யாருக்கு?

அரசாங்கத்தின் கவனத்திற்கு – 03

எனது வலைப்பதிவில் 'தமிழ் படும் பாடு' என்னும் தலைப்பில் இலங்கையில் அரசாங்க அறிவித்தல் பலகைகளில் காணப்படும் தமிழ் எழுத்துப் பிழைகள் தொடர்பாக இரண்டு பதிவுகளைப் பகிர்ந்திருந்தேன். இதனையடுத்து அதற்குப் பொறுப்பான 'அரச கரும மொழிகள் திணைக்கள'த்தின் பணிப்பாளர் தொலைபேசி மூலம் என்னைத் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். முதலாவது பதிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது பதிவு முன்னரே சரிசெய்யப்பட்டு விட்ட போதிலும், அது தொடர்பான படம் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக உலாவி வருவதாகவும் தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்கள் … Continue reading அரசாங்கத்தின் கவனத்திற்கு – 03

மோடியும் தேச பக்தியும்…

Barathi Thambi 1. புல்வாமா தாக்குதலால் தேசத்துக்கு ஆபத்து. 2. ஆபத்தில் இருக்கும் நாட்டை காப்பாற்ற, எதிரியில் நாட்டுக்குள்ளேயே புகுந்து தாக்குதல் 3. ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்க வேண்டிய தேவை உருவாகியிருப்பதால் அதற்கான சௌகிதார்-காவலன் நானே. 4. காவலனாகிய நான், தேசத்தை காப்பாற்றுவதற்காக செயற்கைக்கோளை வீழ்த்தும் அதிநவீன ஏவுகனையுடன் வந்திருக்கிறேன். -- இந்த தேசபக்தி புராஜெக்ட் தேர்தல் முடியும் வரை தொடரும். தகவல் மூலம்: https://m.facebook.com/story.php?story_fbid=10157119757022512&id=554902511 (நன்றி) ஒரு நாட்டின் மீது மக்கள் வைத்திருக்கும் அபரிமிதமான தேசபக்தியை … Continue reading மோடியும் தேச பக்தியும்…

தமிழ் படும் பாடு – 02

இலங்கையில் தமிழ் அரச கரும மொழியாக இருந்தாலும் அதனை சரியாகப் பயன்படுத்தும் தன்மை குறைவாகவே இருக்கிறது. பெயர்ப்பலகைகளிலும் ஆவணங்களிலும் தமிழ் தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் காண முடிகிறது. இப் படம் பேஸ்புக் மூலம் கிடைக்கப் பெற்றது. பிரதேச சபையொன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள விதத்தையே நாம் இதில் காண்கிறோம். தமிழில் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் பரவாயில்லை ஜ அதனை தவறாகப் பயன்படுத்தாமலாவது இருக்கலாமல்லவா? தகவல் மூலம் : https://m.facebook.com/story.php?story_fbid=128973324843998&id=100031939926265 தமிழ் படும் பாடு - 02 https://paththumpalathum.wordpress.com/2019/03/27/tamil-padum-paadu-2/

சமூகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் சமூக வலைத்தளப் பாவனை

நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக சமூக வலைத்தளங்கள் மாறியிருக்கின்றன. நண்பர்கள், உறவினர்கள், தொழில் நண்பர்கள் என எல்லோருடனும் தொடர்பு கொள்வதற்கு சமூக வலைத்தளங்களையே பயன்படுத்துகிறோம். பேஸ்புக், வாட்ஸப், இமோ, வைபர், மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் என அனைத்தும் இந்த சமூக வலைத்தளங்களுக்குள் அடங்கும். இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை உணரப்பட்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக பின்வரும் சம்பவங்களைக் குறிப்பிடலாம். 1. இலங்கையில் கடந்த வருடம் கண்டி, திகன பகுதியில் வன்முறைகளை தூண்ட சமூக வலைத்தளங்கள் … Continue reading சமூகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் சமூக வலைத்தளப் பாவனை