மலையக வீட்டுத் திட்ட அரசியல்

இலங்கை, மலையகம்


மலையகத் தமிழர்களுக்கு தனி வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில் ஆயிரத்தெட்டு அரசியல். கட்சி சார்ந்தவர்களுக்கு செய்கிறார்கள், பிரதேச வேறுபாடு பார்க்கிறார்கள் என்றெல்லாம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.

இது போக அரசு தரப்பிலும் இதற்குள் புகுந்து அவர்களது அரசியல் சித்து விளையாட்டைக் காட்டுகிறார்கள்.

தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கியதிலும் சரி, கடந்த வருட அக்டோபர் சதித் திட்டத்தின் பின்னர் அரசாங்கத்தை காப்பாற்றியதிலும் சரி, வரவு செலவு திட்டத்தில் ஆதரவாக வாக்களித்து அரசைக் காப்பாற்றியதிலும் சரி மலையகத்தின் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு அளப்பரிய பங்குண்டு.

இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் மூன்று தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. மாகாண சபை, நாடாளுமன்றம், ஜனாதிபதி ஆகிய தேர்தல்களே அவை. ஒவ்வொரு கட்சிகளும் இப்போதே தேர்தல் வியூகம் அமைக்கத் தொடங்கி விட்டன.

அவற்றில் ஒன்றாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் செல்வாக்கை ஐக்கிய தேசிய கட்சியில் குறைக்கும் விதமாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.

மலையகத்தில் தனி வீட்டுத் திட்டத்தையும் அவ் வீடுகளுக்கு காணி உறுதி வழங்கும் செயற்றிட்டத்தையும் தமிழ் முற்போக்கு கூட்டணியே ஐந்தாண்டுகளாக செயற்படுத்தி வந்தது.

இந்நிலையில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு 600 வீடுகள் அமைக்கும் திட்டத்தை, ஐக்கிய தேசிய கட்சி அரசு வழங்கியுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியிடமிருந்து எடுக்க வேண்டியதையெல்லாம் எடுத்துக்கொண்டு இப்போது தேர்தல் நெருங்கியதும் வியூகத்தை மாற்றுவது முறையா?

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்றுவிட்டு போவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

Leave a comment