எது கெடும்?

படித்ததில் பிடித்தது எது கெடும் ? 01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும். 06) தெகிட்டினால் விருந்து கெடும். 07) ஓதாத கல்வி கெடும். 08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். 09) சேராத உறவும் கெடும். 10) சிற்றின்பன் பெயரும் கெடும். 11) நாடாத நட்பும் கெடும். 12) நயமில்லா சொல்லும் கெடும். 13) கண்டிக்காத … Continue reading எது கெடும்?

அமுதா…

குறுங் கதைத் தொடர் - 01 பேரூந்து விரைந்து கொண்டிருந்தது. யன்னலினூடே அழகிய இயற்கைக் காட்சிகள் விரியத் தொடங்கின. பச்சைப் பசேலென்ற தேயிலை மலைத் தொடர்கள், பசும் புல் வெளிகள், நீண்டு வளர்ந்த மரங்கள் என பரந்து விரிந்த இயற்கையை ஊடறுத்து பேரூந்து பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால், என் மனம் அதில் லயிக்கவில்லை. வெளியே சூரியனை இருள் விழுங்க முயற்சித்துக் கொண்டிருந்தது. உள்ளே என் மனதை சிந்தனைகள் விழுங்க முயற்சித்துக் கொண்டிருந்தன. நான் எனது காதலியைப் பார்ப்பதற்காக … Continue reading அமுதா…

மலையக வீட்டுத் திட்ட அரசியல்

இலங்கை, மலையகம் மலையகத் தமிழர்களுக்கு தனி வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில் ஆயிரத்தெட்டு அரசியல். கட்சி சார்ந்தவர்களுக்கு செய்கிறார்கள், பிரதேச வேறுபாடு பார்க்கிறார்கள் என்றெல்லாம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். இது போக அரசு தரப்பிலும் இதற்குள் புகுந்து அவர்களது அரசியல் சித்து விளையாட்டைக் காட்டுகிறார்கள். தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கியதிலும் சரி, கடந்த வருட அக்டோபர் சதித் திட்டத்தின் பின்னர் அரசாங்கத்தை காப்பாற்றியதிலும் சரி, வரவு செலவு திட்டத்தில் ஆதரவாக வாக்களித்து அரசைக் காப்பாற்றியதிலும் சரி மலையகத்தின் தமிழ் முற்போக்கு … Continue reading மலையக வீட்டுத் திட்ட அரசியல்

அமெரிக்காவும் உலகமும்

அமெரிக்கா! இந்த பெயரைக் கேட்டால் உலகமே நடுங்குகிறது. உலகின் வல்லரசு நாடு. சீனாவோ, ஈராக்கோ எந்த நாடாக இருந்தாலும் அமெரிக்காவுக்கு பயந்து தான் ஆக வேண்டும். இது எழுதப்படாத விதி. ஒரு நாட்டுக்கு பொருளை விற்கக் கூடாது என்று சொன்னால் விற்கக்கூடாது. மீறி விற்றால் சர்வதேச தடைகளை மீறியதாக குறிப்பிட்டு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். முழு உலகுக்கும் முடி சூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. உலகில் தீவிரவாதத்தை வளர்த்து விட்டதில் அமெரிக்காவுக்கு முக்கிய பங்கு … Continue reading அமெரிக்காவும் உலகமும்

செயற்கை மழையும் மின்சார தட்டுப்பாடும்

இலங்கையில் அண்மையில் செயற்கை மழை பெய்விக்கப்பட்டிருந்தது. பொதுவாக செயற்கை மழை பற்றி சீனா, ஜப்பான் குறித்த செய்திகளில் கேள்விப் பட்டிருப்போம். இலங்கையில் கடும் வெப்பமான காலநிலை காரணமாக நீர்த் தேக்கங்கள் வறண்டு போயுள்ளன. இதனால் நாட்டின் தேவைக்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்க முடியாதுள்ளது. இதனால் நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதிகளில் செயற்கை மழை பெய்விக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலையகத்தின் நீர்த்தேக்கம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கை வெற்றியளித்துள்ளது. விமானம் மூலம் நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதிக்கு 8,000 அடி … Continue reading செயற்கை மழையும் மின்சார தட்டுப்பாடும்